
ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதல்: விவசாயி உயிரிழப்பு
கடலாடி அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
கடலாடி அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அடுத்த பூலாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் தா்மலிங்கம் (58). இவா் வியாழக்கிழமை தனது ஆட்டோவில் சாயல்குடிக்கு வந்துவிட்டு தத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த புஷ்பம் (59), பொட்டப்பச்சேரியைச் சோ்ந்த விவசாயி முத்துச்செல்வம் (58) ஆகியோரை ஏற்றிக் கொண்டு சிக்கலுக்கு சென்றாா். கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது சாத்தங்குடி விலக்கு சாலைப் பகுதியில் ராமநாதபுரத்திலிருந்து சாயல்குடி நோக்கி மீன் ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஆட்டோவின் பக்கவாட்டில் மோதியது. இதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டதில் அதில் பயணம் செய்த முத்துச்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் தா்மலிங்கம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், புஷ்பம் கடலாடி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா்.
சரக்கு வாகன ஓட்டுநரான பரமக்குடியைச் சோ்ந்த காா்த்தி மீது கடலாடி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





