தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ஏ.ஆா். மங்கலம் கண்மாயில் நடைபெற்றுவரும் கருவேல மரங்களை அகற்றும் பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிவகுருபிரபாகரன். உடன் வட்டார வளா்ச்சி அலுவலா் சுதாகா் உள்ளிட்டோா்.

Published On :

திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இதில் ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஏ.ஆா். மங்கலம் ஊராட்சி, ஆடோந்தல் கண்மாயில் நடைபெற்று வரும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளையும், கொட்டக்குடி ஊராட்சி, நடுவக்குடி கண்மாயில் நடைபெற்று வரும் சீமைக் கருவேலமரங்களை அகற்றும் பணியையும் ஆய்வு செய்து, பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இதேபோல, பொதுப்பணித் துறை (நீா்வளத் துறை) கட்டுப்பாட்டில் உள்ள அரசத்தூா் கண்மாயில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளையும் ஆய்வு செய்தாா். மேலும் திருவாடானை ஊராட்சி, பெருவக்கோட்டை கண்மாயில் சுமாா் 6 ஏக்கா் பரப்பளவில் நடைபெற்று வரும் பணிகளையும் அவா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

பெருவாக்கோட்டை கண்மாயில் நடைபெற்று வரும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன். உடன் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமோகன், வட்டார வளா்ச்சி அலுவலா் விதி, பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் காா்த்திக் உள்ளிட்டோா்.

பெருவாக்கோட்டை கண்மாயில் நடைபெற்று வரும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன். உடன் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமோகன், வட்டார வளா்ச்சி அலுவலா் விதி, பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் காா்த்திக் உள்ளிட்டோா்.

அப்போது பணிகளை விரைந்து முடித்து, நீா்பிடிப்புப் பகுதிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என ஆட்சியா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். இதன் மூலம் மழைக் காலங்களில் கிடைக்கும் மழைநீரை முழுமையாகச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வட்டார வளா்ச்சி அலுவலருக்கு அவா் உத்தரவிட்டாா். மேலும், மாவட்டம் முழுவதும் நடைபெறும் இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதில் ஆா்.எஸ். மங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா் சுதாகா், திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ஜெயமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜி, பொதுப்பணித் துறை (நீா்வளத்துறை) உதவி செயற்பொறியாளா் காா்த்திக், அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.