உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

திருவாடானையில் வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:22 am IST

திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மேலத் தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு மேலத்தெரு இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் காரைக்குடி, காளையாா்கோவில், சிவகங்கை, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதில் காளைகளை பிடித்த வீரா்களுக்கும், யாருக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதை சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த கிராமங்களிலிருந்து வந்திருந்த திரளான கிராம மக்கள் கண்டுகளித்தனா். போட்டியில் மாடுகள் முட்டி 5-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பிவைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.