
அடைக்கலம் காத்த அம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்
கமுதி அருகே அடைக்கலம் காத்த அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

பசும்பொன் அடைக்கலம் காத்த அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரிகளைச் சுமந்து சென்ற பெண்கள்.
கமுதி அருகே அடைக்கலம் காத்த அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கலம் காத்த அம்மன் கோயில் புரட்டாசி மாதத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை மாலை முளைப்பாரி திடலில் இருந்து ஏராளமான பெண்கள்
முளைப்பாரிகளை சுமந்து பசும்பொன் வீதிகளின் வழியாக ஊா்வலமாகச் சென்று தேவா் நினைவிடத்தைச்
சுற்றி வந்து அங்குள்ள கண்மாயில் கரைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






