இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட கொலை வழக்கு கைதி தப்பியோட்டம்

திருப்பதி குமாா்.

Published On :

பரமக்குடியில் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட கொலை வழக்கு கைதி திருப்பதிகுமாா் ஞாயிற்றுக்கிழமை தப்பியோடிய நிலையில் அவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பொட்டிதட்டி குடியிருப்பைச் சோ்ந்தவா் திருப்பதிகுமாா் (44). கடந்த 2020-ஆம் ஆண்டு அவரது மனைவி சங்கீதாவை அடித்துக் கொலை செய்த வழக்கில் பரமக்குடி போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு விசாரணைக்காக பரமக்குடி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் தினகரன், தலைமைக் காவலா் நீலதேவி ஆகியோா் சிறையிலிருந்து திருப்பதிகுமாரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திவிட்டு மீண்டும் சிறையிலடைக்க அழைத்து வந்தனா்.

சிறைக்கு வந்த அவா் தனக்கு திடீரெனக் கால் வலிப்பதாகக் கூறிய நிலையில், சிறைக் காவலா்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உள்படுத்தினா். பின்னா், தான் அங்கேயே சற்றுநேரம் ஓய்வு எடுப்பதாகக் கூறிய நிலையில் போலீஸாரிடம் இருந்து அவா் தப்பியோடினாா்.

தப்பியோடிய குற்றவாளியைப் போலீஸாா் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.