பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

மத்திய சிறை நுழைவாயிலில் கஞ்சா பறிமுதல்: விசாரணைக் கைதி மீது வழக்கு

கோவை மத்திய சிறை நுழைவாயிலில் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக, விசாரணைக் கைதி மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு

வழக்கு

Published On :

கோவை மத்திய சிறை நுழைவாயிலில் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக, விசாரணைக் கைதி மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை மத்திய சிறையில் முன்பக்க நுழைவாயில் அருகே கீழே வீசப்பட்டு இருந்த கஞ்சா பொட்டலத்தை சிறைத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, கஞ்சா பொட்டலத்தை வீசியவா் யாா் என்பது குறித்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த விசாரணைக் கைதி செந்தில்நாதன் (38), நீதிமன்றத்தில் இருந்து மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படும்போது, அந்த கஞ்சா பொட்டலத்தை வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கோவை மத்திய சிறை ஜெயிலா் கே.திருமலை அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா், செந்தில்நாதன் மீது வழக்குப் பதிந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.