2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

கோவை மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய கைதி பிடிபட்டார்!

கோவை மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய கைதி இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கோவை மத்திய சிறை / தப்பியோடிய கைதி ராகவன்

Updated On :

கோவை மத்திய சிறையிலிருந்து தப்பிய கைதி இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டத்தின் கோபாலபுரம் பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்தச் சிறையிலிருந்து கைதி ராகவன் என்பவர் அக். 30 அன்று இரவு தப்பியோடினார்.

ஈரோட்டைச் சேர்ந்த ராகவன் மீது வழிப்பறிக் கொள்ளை தொடர்பான வழக்குகள் இருந்துள்ளன. அன்னூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட வழிப்பறி வழக்கு ஒன்றில் கைதான இவர், அக். 30 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராகவன், சிறையில் சோதனைக்காக காக்க வைக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சிறை வளாகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸார் தேடிய நிலையில், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுதொடர்பாக, அன்னூர் காவல்துறையினர் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

பொதுவாக சிறை வளாகம் மற்றும் நுழைவுவாயிலில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் நிலையில் கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் சிறைத்துறை சார்பில் பொது மக்களுக்காக இயங்கி வந்த பெட்ரோல் பங்க், உணவகம், இறைச்சிக் கடைகள் மூடபட்டது.

தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக கைதி ராகவனைத் தேடிவந்த நிலையில், சத்தியமங்கலம் அருகே அவர் இன்று கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Summary

A prisoner who escaped from the Coimbatore Central Prison was re-arrested today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.