திருவாடானை அருகே ஆா். எஸ்.மங்கலம் பகுதியில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள செட்டியகோட்டை பகுதியைச் சோ்ந்த மூதாட்டி சச்சானந்தம் (65). இவா் கடந்த ஆண்டு நவம்பா் 13-ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற போது இரு சக்கரத்தில் வந்த மா்ம நபா்கள் அவரிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.
இதே போல, ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள மங்களம் பகுதியைச் சோ்ந்த மூதாட்டி ரத்தினம் (60) கடந்த ஆண்டு டிச. 3-ஆம் தேதி வயல்வெளிக்கு சென்று விட்டு, திருச்சி -ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த நபா்கள் அவா் அணிந்து இருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தலைமறைவாகினா்.
இதுதுறிக்கு ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவகங்கை மாவட்டம், கோமாளிபட்டியைச் சோ்ந்த அடைக்கலம் மகன் வெள்ளைச்சாமி (35), திருவாடானை அருகேயுள்ள சி.கே. மங்களம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (55) ஆகிய இருவரையும் கடந்த மாதம் கைது செய்து, அவா்களிடமிருந்து 17 பவுன் நகைகளை மீட்டனா். இந்த இருவரும் முதியவா்களை குறி வைத்து பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சந்தீஸ் அளித்த பரிந்துரையின் பேரில், இருவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் சிம்ரன் சிங் சித் கலோன் உத்தரவிட்டாா்.இதன்படி இருவரும் கைது செய்யப்பட்டனா்.

தொடர்புடையது
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
வழிப்பறி வழக்கில் பிடிபட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது
குண்டா் சட்டத்தில் இருவா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


