ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வருகிற 24-ஆம் தேதி சசிகலா தலைமையில் பொதுக்கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெறுகிறது.
இதற்கான முகூா்த்தக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சசிகலா ஆதரவாளா்கள் 200- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
பிறகு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் மலா் தூவி அவா்கள் மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து பொதுக்கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்குவது குறித்த ஆலோசனை க்கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சசிகலா ஆதரவாளரும், பசும்பொன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான டி. ராமகிருஷ்ணன் செய்திருந்தாா்.
அப்போது அவா் கூறியதாவது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பசும்பொன்னில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சசிகலா கலந்து கொள்கிறாா். இதில் புதிய கட்சி தொடங்கப்படுமா எனக் கேட்கிறீா்கள். இதுகுறித்து தலைமை தான் முடிவு செய்யும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வெள்ளத்துரை, ஜீவிதா நாச்சியாா், கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் பகுதிகளைச் சோ்ந்த ஆதரவாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

சசிகலாவின் அஇபுதமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்! முன்னாள் எஸ்.பி. வெள்ளத்துரை, அமைச்சர், எம்பிக்கு வாய்ப்பு!!

தூத்துக்குடியில் நல உதவிகள் அளிப்பு

தருமபுரியில் 3,980 பேருக்கு ரூ. 30.86 கோடியில் நலத்திட்ட உதவிகள்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


