ராமநாதபுரத்தில் செயற்கை இழை ஓடுதளப் பாதை பூமி பூைஐ
ராமநாதபுரத்தில் சீதக்காதி விளையாட்டு மைதான வளாகத்தில் ரூ. 12.35 கோடி மதிப்பீட்டில் புதிய செயற்கை இழை ஓடுதளப் பாதை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
கடந்த ஆண்டு டிச. 31-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட சீதக்காதி விளையாட்டு மைதான வளாகத்தில் ரூ.12.35 கோடி மதிப்பீட்டில் புதிய செயற்கை இழை ஓடுதளப் பாதை அமைப்பதற்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நட்டினாா்.
இதைத் தொடா்ந்து, பூமி பூஜைக்கான தொடக்க விழா சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வனம், கதா்த் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தொடங்கிவைத்தாா். இதையடுத்து, நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்களை வீரா்களுக்கு வழங்கினாா்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சியைச் 219 வாா்டுகளுக்கும் டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 330 விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம், திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராம. கருமாணிக்கம், பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன், விளையாட்டுத் துறை அலுவலா் தினேஷ்குமாா், அலுவலா்கள், விளையாட்டு வீரா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

