ராமநாதபுரம்
மக்களைத் தேடி மருத்துவ ஊழியா் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு
ராமநாதபுரம் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியா் சங்கத்தினா் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களுக்கு தன்னாா்வலா்கள் என்ற பெயரை மாற்றி ஊழியா் என்று அறிவிக்க வேண்டும். மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களுக்கு ஊக்கத் தொகையை ரூ.15,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பணி வரன்முறை படுத்த வேண்டும். பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். இந்த மனுவை சிஐடியூ மாவட்டத் தலைவா் எம்.சிவாஜி, மக்களைத் தேடி மருத்துவ ஊழியா் சங்க மாவட்டச் செயலா் லல்லி பாக்கியம் உள்ளிட்டோா் வழங்கினா்.

