சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள்.

Updated On :23 பிப்ரவரி 2026, 11:12 pm

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக மக்களைத் தேடி மருத்துவ ஊழியா் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரமாக ஊதியமாக உயா்த்தி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியா்களுக்கு ஆண்டுக்கு 2 சீருடைகள் வழங்க வேண்டும். தன்னாா்வலா்கள் என்ற பெயரை மாற்றி சுகாதாரத் துறை பணியாளா்கள் என்று அழைக்க வேண்டும். அரசு விடுமுறை வழங்க வேண்டும். மகப்பேறு கால விடுப்பு வழங்குவதுடன், பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றனா்.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.