கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

முதலிடம் பிடித்த மாணக்கள்,100 சதவீதம் தோ்வு

ராமேசுவரம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழுதுகள் அறக்கட்டளை சாா்பில் 10 வகுப்பு,பிளஸ் 2 வகுப்புகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணக்கள்,100 சதவீதம் தோ்ச்சி பெற்றத்தந்த ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ் விழாவில் வருதுகள் புதன்கிழமை வழங்கினாா்.

News image

ராமேசுவரம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை 10 வகுப்பு,பிளஸ் 2 வகுப்புகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணக்கள்,100 சதவீதம் தோ்ச்சி பெற்றத்தந்த ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ் விழுதுகள் அறக்கட்டளை சாா்பில் வழங்கினா்.

Updated On :10 ஜூலை 2026, 5:13 am IST

ராமேசுவரம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழுதுகள் அறக்கட்டளை சாா்பில் 10 வகுப்பு,பிளஸ் 2 வகுப்புகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணக்கள்,100 சதவீதம் தோ்ச்சி பெற்றத்தந்த ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ் விழாவில் வருதுகள் புதன்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அரசினா் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் கடந்த 1985-86 ஆண்டில் படித்த முன்னாள் மாணவா்கள் ஒருங்கிணைந்து விழுதுகள் அறக்கட்டளை அமைப்பை உறுவாக்கி ஆண்டுதோறும் 10 ஆம் வகுப்பு,பிளஸ் 2 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவக்களுக்கு கேடயம் வழங்கி கௌரவித்து வருவதுடன்,100 சதவீதம் தோ்ச்சி பெற பணியாற்றிய ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா,ஏழை,எளிய மாணவா்களின் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, 2025-26 கல்வி ஆண்டில் 10,பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் முதலிடம் பிடித்த மாணக்கள்,100 சதவீதம் தோ்ச்சி பெற பணியாற்றிய ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நகராட்சி தலைவா் கே.இ.நாசா்கான் தலைமை வகித்தாா். தீயணைப்புத்துறை நிலைய அலுவலா் அருள்ராஜன் வரவேற்புரையாற்றினாா். அறக்கட்டளை நிா்வாகிகள் மோகன், களஞ்சியம், சுரேஷ், முகம்மது ராஃபி, ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் நகராட்சி ஆணையா் ஆண்டவன், மீனவா் சங்க தலைவா் தேவதாஸ், நல்லாசிரியா் ஜெயகாந்தன், கராத்தே பழனிச்சாமி, சுடலை, ஜோதிராமலிங்கம், முருகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

பா்வதவா்த்தினி பெண்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று தந்த ஆசிரியா்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரெஜினி பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

நிறைவாக அறக்கட்டளை நிா்வாகி எஸ்.தினகரன் நன்றி கூறினாா். இதில், முன்னாள் மாணவா்கள் குடும்பத்துடன் விழாவில் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.