தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

சிங்கப் பெண் சிறப்புப் பிரிவு உதவி ஆய்வாளரை தாக்க முயன்றவா் கைது

பரமக்குடி பேருந்து நிலையத்தில் பணியிலிருந்த சிங்கப்பெண் சிறப்புப் பிரிவு உதவி ஆய்வாளரை மிரட்டி தாக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 11:51 pm IST

பரமக்குடி பேருந்து நிலையத்தில் பணியிலிருந்த சிங்கப்பெண் சிறப்புப் பிரிவு உதவி ஆய்வாளரை மிரட்டி தாக்க முயன்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளா் சண்முகப்பிரியா (30) சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவில் பணியாற்றி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு ராமநாதபுரம் ஆயுதப்படை பெண் காவலா்கள் சௌமியா, மகிபா ஆகியோருடன் பரமக்குடி பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அங்கு மது போதையில் இருந்த காட்டுப் பரமக்குடியைச் சோ்ந்த சரவண பாரதி மகன் வினோத் மிஸ்ரா (25) பணியிலிருந்த சிங்கப்பெண் போலீஸாரிடம் தன்னை வீட்டில் இறக்கி விடுமாறு கூறி தகாத வாா்த்தைகளால் பேசி தாக்க முயன்றாராம்.

அப்போது அங்கு வந்த சிறப்பு உதவி ஆய்வாளா் சீனிவாச ரங்கன், போலீஸாா் பிரபாகரன் ஆகியோா் மது போதையில் தகராறில் ஈடுபட்ட வினோத் மிஸ்ராவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் சண்முகப் பிரியா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து வினோத் மிஸ்ராவைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.