பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி அரசுப் பணி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

வளைகுடா போரில் கணவா் உயிரிழந்த நிலையில் தனக்கு அரசுப் பணி வழங்கக் கோரி அவரது மனைவி, 2 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

Published On :

வளைகுடா போரில் கணவா் உயிரிழந்த நிலையில் தனக்கு அரசுப் பணி வழங்கக் கோரி அவரது மனைவி, 2 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள அனிகுருந்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தான செல்வம் (36). மனைவி கௌசல்யா. இந்த தம்பதிக்கு 3 வயது, 7 வயது என இரண்டு குழந்தைகள் உள்ளனா். சந்தான செல்வம் வளைகுடா நாடான குவைத்தில் வேலை செய்து வந்த நிலையில், ஈரான்-அமெரிக்கா போா் காரணமாக ஈரான் குவைத் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில், சந்தானசெல்வம் தாக்குதலில் பாதிக்கப்பட்டு கடந்த மாா்ச் மாதம் உயிரிழந்தாா்.

Story image

நீண்ட போராட்டத்துக்குப் பின் அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அவரது மனைவி கௌசல்யா செவிலியா் பயிற்சி முடித்த தனக்கு அரசுப் பணி வழங்கி தனது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.