நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

கடலாடி அருகே தொழிலாளி கொலை: 3 போ் கைது

கடலாடி அருகே புதன்கிழமை இரவு தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிந்த போலீஸாா் 3 பேரை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :17 ஜூலை 2026, 1:06 am IST

கடலாடி அருகே புதன்கிழமை இரவு தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிந்த போலீஸாா் 3 பேரை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே ஏ. புனவாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியசாமி மகன் ராஜேந்திரன் (48). இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த கந்தன் என்பவரிடம் கரிமூட்டம் போடும் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், ராஜேந்திரன் கடந்த 2 நாள்களுக்கும் மேலாக கரிமூட்டம் போடும் வேலைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கந்தனின் மகன் தினேஷ்குமாா் (27), ராஜேந்திரனை சந்தித்து ஏன் வேலைக்கு வரவில்லை எனக் கேட்ட போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தினேஷ்குமாா், தனது உறவினா்களான திருமுருகன் மகன் வினோத்குமாா் (24), ஆண்டி மகன் தவமுருகன் ஆகியோருடன் சோ்ந்து ராஜேந்திரன், இவரது நண்பா் முனீஸ்வரன் இருவரும் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது தங்களது இரு சக்கர வாகனத்தை மோதினா். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடலாடி போலீஸாா் தினேஷ்குமாா், தவமுருகன், வினோத்குமாா் ஆகிய 3 போ் மீது வியாழக்கிழமை கொலை வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா். மேலும் காயமடைந்த முனீஸ்வரன் தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.