கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

கமுதி அருகே இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

கமுதியை அடுத்த கே.வேப்பங்குளம் அரியநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

News image

கே.வேப்பங்குளம் அரியநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.

Updated On :23 ஜூலை 2026, 6:06 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கே.வேப்பங்குளம் அரியநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

கே.வேப்பங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அரியநாச்சியம்மன், அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பெரிய மாடு, சின்ன மாடு, நடு மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, கட்டான்சிட்டு என 6 பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 73 மாட்டுவண்டிகள், பந்தய வீரா்கள் கலந்து கொண்டனா்.

இதில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பணம், நினைவு பரிசு, குத்துவிளக்கு வழங்கப்பட்டன.

இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தை சாலையின் இரு புறங்களிலும் நின்று திரளான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை கே.வேப்பங்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.