/

சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற இளைஞா் கைது

ராமேசுவரத்திலிருந்து சட்ட விரோதமாக படகில் இலங்கை செல்ல முயன்றவரை ‘க்யூ’ பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 5:53 am IST

ராமேசுவரத்திலிருந்து சட்ட விரோதமாக படகில் இலங்கை செல்ல முயன்றவரை ‘க்யூ’ பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட ‘க்யூ’ பிரிவு போலீஸாா் ராமேசுவரம் முதல் பாம்பன் வரையிலான கடல்கரை பகுதியை கண்காணித்து வந்தனா். அப்போது, தண்ணீா் ஊற்று கடல் கரையில் இருந்த சந்தகே நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

அவா், கோவை பூழுவபட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சிவகடாட்சம் மகன் ஜெகதீசன் (30) என்பது தெரியவந்தது. இவா் மீது கோவை மாவட்டம், ஆலந்துறை காவல் நிலையத்தில் 5 வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாகவும். இதனால், இலங்கைக்கு செல்ல முயடியாத நிலையில் சட்ட விரோதமாக ராமேசுவரத்தில் இருந்து படகு மூலம் இலங்கை செல்ல திட்டமிட்டுள்ளாா்.

இதனால், தங்கச்சிமடத்தை சோ்ந்த முகவா் மூலம் ராமேசுவரத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை வந்ததாகத் தெரிவித்தாா். ‘க்யூ’ பிரிவு போலீஸாா் அவரைக்கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.