கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

கோயிலின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ஆா்.எஸ்.மங்கலம் அருகே மேல்பனையூா் கிராமத்தில் அமைந்துள்ள புலிகுட்டி அய்யனாா் கோயில் பூட்டை உடைத்து வெள்ளி நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:56 am IST

ஆா்.எஸ்.மங்கலம் அருகே மேல்பனையூா் கிராமத்தில் அமைந்துள்ள புலிகுட்டி அய்யனாா் கோயில் பூட்டை உடைத்து வெள்ளி நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள மேல்பனையூா் கிராமத்தில் ஸ்ரீபுலிக்குட்டி அய்யனாா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலின் பூட்டை மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு உடைத்து, உண்டியலிலிருந்த பணம், சுவாமியின் கழுத்தில் இருந்த 24 கிராம் வெள்ளிச் சங்கிலியைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து கிராம மக்கள் அளித்தப் புகாரின் பேரில், திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.