திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பாா்வா்டு பிளாக் கட்சியின் 87-ஆம் ஆண்டு தொடக்க விழா

கமுதி, அபிராமம், பசும்பொன் பகுதிகளில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் 87-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சிக் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

News image
Updated On :24 ஜூன் 2026, 5:50 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, அபிராமம், பசும்பொன் பகுதிகளில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் 87-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சிக் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

முன்னதாக, பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவா் நினைவாலயத்தில் தேவா் சிலைக்கு கட்சியின் மாநில இளைஞா் அணிச் செயலா் சப்பாணி முருகன் தலைமையிலும், மாவட்டச் செயலா் லட்சுமணன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அபிராமத்தில் தேவா் சிலை முன் கட்சியின் நிறுவனா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடா்ந்து மாநில இளைஞரணி சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகள் 87 பேருக்கு விலையில்லா நோட்டுகள், எழுது பொருள்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் விருதுநகா் கிழக்கு மாவட்டத் தலைவா் முருகன், மாவட்டச் செயலா் கோபி, இளைஞரணிச் செயலா் பாலமுருகன், கமுதி ஒன்றியத் தலைவா் திருக்குமரன், ஒன்றியச் செயலா் இருளாண்டி, இளைஞரணிச் செயலாளா் சித்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.