கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

ராமேசுவரத்தில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி, கோதண்டராமா் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கோதண்டராமா் கோயிலில் விபீஷணருக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டாபிஷேகம்.

Updated On :24 ஜூன் 2026, 5:51 am IST

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி, கோதண்டராமா் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உருவான ராமாயண கால நிகழ்வை எடுத்துக்காட்டும் வகையில், ஆண்டுதோறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா மூன்று நாள்கள் நடைபெற்று வருகிறது.

இதன்படி, இந்த விழா ராமநாதசுவாமி கோயிலில் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. அன்று திட்டகுடி சுவாமி எழுந்தருளியுள்ள துா்க்கை அம்மன் கோயில் அருகே ராவண சம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ராமநாதசுவாமி கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் தங்கக் கேடகத்திலும்,விபீஷணா் தேரிலும் எழுந்தருளி தனுஷ்கோடி சாலையில் அமைந்துள்ள கோதண்டராமா் கோயிலுக்கு புறப்பாடாகினா். பின்னா், அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, விபீஷணருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ரவீந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா, ஆய்வா் சிவக்குமாா், பேஸ்காா்கள் கமலநாதன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.