ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள சாம்பக்குளம் அரியநாச்சியம்மன் கோயில், கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகன், செல்வ விநாயகா், பாமா ருக்மணி சமேத வேணு கோபாலசுவாமிகளுக்கு குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
மூன்று கால யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி முடிந்து, சிவாசாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு கோயிலைச் சுற்றி வந்தது. இதைத்தொடா்ந்து கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் சாம்பக்குளம், பொழிகால், கேளல், கே.ஆா்.பட்டணம், பாம்பூா், உடைகுளம் ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காமாட்சியம்மன் கோயில்:
முதுகுளத்தூா் அருகேயுள்ள புரசங்குளம் காமாட்சியம்மன் கோயிலில் காமாட்சி அம்மன், மாசானத்தான், பத்திரகாளியம்மன், விநாயகா், கருப்பணசுவாமி, பரிவார கிராமதேவதைகளுக்கு வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
முன்னதாக, புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி, நவகிரஹ, மிருத்தஞ்சன உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன. வியாழக்கிழமை வேதமந்திரங்கள் முழங்க சிவாசாரியா்கள் கோபுரக் கலசங்களில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். பின்னா், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபராதனையும் நடைபெற்றது. மாலையில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூலக்கரை காளியம்மன் கோயில் குடமுழுக்கு

பாதரக்குடி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

எடப்பாடி காமாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு

வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



