சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள பாதரக்குடி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் அருள்பாலித்து வரும் முத்துமாரியம்மன், மங்கள விநாயகா், சுப்பிரமணியா், கல்யாண நவக்கிரகம், பரிவாரத் தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடத்துவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. நான்காம் கால யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை நிறைவடைந்தது. பின்னா், காலை 11 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், துலாவூா் ஆதீனம், பாதரக்குடி ஆதீனம் ஆகியோா் முன்னிலையில் கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், கிட் அண்ட் கிம் கல்லூரி தலைவா் வீ. ஐயப்பன், கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூலக்கரை காளியம்மன் கோயில் குடமுழுக்கு

செங்காகவுண்டனூரில் பழனியாண்டவா் கோயில் குடமுழுக்கு

சங்கரன்கோவில் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

சுந்தர விநாயகா் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



