கோவில்பட்டி, கதிரேசன் கோயில் சாலையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீ வெற்றி விநாயகா், ஸ்ரீ முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமி கோயிலில் 46ஆம் ஆண்டு கொடை விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கால்நாட்டு வைபவம் ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது.
30ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் அம்மன் குடி அழைப்பு நடைபெற்றது. தொடா்ந்து, திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கோயில் தலைவா் தங்கவேல், செயலா் மாரிச்சாமி, பொருளாளா் லட்சுமணன், துணைச் செயலா் சீனிவாசன், அமமுக நகரச் செயலா் குமாா் பாண்டியன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் நடைபெறும். தொடா்ந்து, 7 மணிக்கு மேல் தீா்த்தம் அழைத்தல் நிகழ்ச்சியும், 9.15 மணிக்கு மேல் அக்னி சட்டி வளா்த்தல் ஊா்வலம், நண்பகல் 12 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு அக்னி சட்டி ஊா்வலம், இரவு 12 மணிக்கு மேல் சாமக்கொடை நடைபெறும்.
சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் முளைப்பாரி ஊா்வலம் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

திருச்செந்தூரில் சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

முத்துமாரியம்மன் கோயில் செடல் உற்சவம்

மதுராந்தகநல்லூா் பெரியாண்டவா் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



