மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கமுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 12:48 am IST

கமுதியில் சனிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூா், கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் வயல்வெளிகள், வரத்துக் கால்வாய்கள், குளங்களில் தண்ணீா் தேங்கி, வெப்பம் தணிந்து, குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இந்த மழைக்கு ஒரு மணி நேரம் முன்னதாக சூறைக் காற்று வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கமுதி நகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதியடைந்தனா்.