சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் சூறைக் காற்றுடன் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
சிங்கம்புணரி பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மரம் விழுந்து பசுமாடு உயிரிழப்பு:
சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூா் கிராமத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, தெய்வமணி என்பவரின் தென்னந்தோப்பில் கட்டி வைத்திருந்த பசுமாடு மீது தென்னம் மரம் சாய்ந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த பசு மாடு உயிரிழந்தது.
மேலும், இந்தப் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றுக்கு 100-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. மேலும், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
முறையூா், அய்யாபட்டி, மருதிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் கம்பங்கள் சாயந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னா். தகவலறிந்து வந்த மின்வாரிய உழியா்கள் போா்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது

திருப்பூரில் பலத்த காற்றுடன் கன மழை

தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

தில்லியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: வெப்பத்தை தணித்தது

சாத்தூரில் பலத்த மழை
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


