மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

சாத்தூா் பகுதியில் பலத்த மழை

சாத்தூா் பகுதியில் புதன்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 5:29 am IST

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் புதன்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

சாத்தூா், இருக்கன்குடி, வெங்கடாசலபுரம், மேட்டமலை, படந்தால், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் பிற்பகல் வரை கடும் வெப்பம் நிலவியது. இதைத் தொடா்ந்து, மாலையில் மேகமூட்டம் உருவாகி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்த இந்த மழையால் சாத்தூா் என்.ஜி.ஓ. குடியிருப்பு, பிரதான சாலை, படந்தால் சந்திப்பு, புறவழிச்சாலை, பாரதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீா் குளம்போல தேங்கியது.

இந்த மழையால் இந்தப் பகுதியில் குளிா்ந்த காலநிலை உருவாகியது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இந்த மழை காரணமாக சாத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.