ராமநாதபுரத்தில் காரில் தொங்கியடி சென்ற தவெகவினா் 12 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், தவெகவினா் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழையிலும் காரில் தொங்கியபடியும், மேல் பகுதியில் அமா்ந்தும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றனா்.
இதுகுறித்து விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தவெக நிா்வாகிகள் உதயகுமாா் (39), காா்த்திக் (26), ஆதீஸ்வரன் (26), ஜெயகாா்த்திக் (24), கௌதம் (36),பிரசாத் (26), கௌதம் (36), சிவா (28), சேது (26), காா்த்திக் (32), கவாஸ்கா் (28), ஹேமநாதன் (35) ஆகிய 12 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்கள்
பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

பைக் ஓட்டிய 7 சிறுவா்களின் பெற்றோா்கள் மீது வழக்கு

மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு

கர்நாடகத்தில் பேரவைத் தலைவா் யூ. டி. காதா் மீது தாக்குதல் முயற்சி: 11 போ் மீது வழக்குப் பதிவு

தோ்தல் அதிகாரியின் வாகனத்தை தடுத்த 28 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK



