விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-ஆவது நாளாக மழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5- ஆவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image

மழை - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5- ஆவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக இந்தப் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான கால நிலை நிலவுகிறது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ராமேசுவரத்தில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-ஆவது நாளான சனிக்கிழமை மழை அளவு மி.மீட்டரில்: ராமநாதபுரம் 4, மண்டபம் 4.40, ராமேசுவரம் 26, தங்கச்சிமடம் 43.40, பாம்பன் 24.20.