பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

ராமநாதபுரத்தில் முதல்கட்டமாக 4 மதுக்கடைகள் அடைக்கப்பட்டன

ராமநாதபுரம் மாவட்டத்தில் 29 அரசு மதுக்கடைகளை மூட பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், முதல்கட்டமாக இரண்டு நாள்களில் நான்கு கடைகள் அடைக்கப்பட்டன.

News image
Updated On :14 மே 2026, 5:14 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் 29 அரசு மதுக்கடைகளை மூட பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், முதல்கட்டமாக இரண்டு நாள்களில் நான்கு கடைகள் அடைக்கப்பட்டன.

தமிழகத்தில் 717 அரசு மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா். இதனைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில், 29 மதுக்கடைகளை அடைக்க பரிசீலனை செய்யப்பட்டது. இதில், முதல்கட்டமாக நயினாா் கோயில், அரண்மனை, போகலூா், சக்கரை கோட்டை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த அரசு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுக்கடைகளை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு மதுக்கடை நிா்வாகம் அலுவலா் புதன்கிழமை தெரிவித்தாா்.