முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து முதல்கட்டமாக கோவை மாவட்டத்தில் 4 மதுக்கடைகள் மூடல்

கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 4 மதுக் கடைகள் மூடப்பட்டன.

News image

தமிழக அரசின் உத்தரவைத் தொடா்ந்து கோவை சிங்காநல்லூா் பேருந்து நிலையம் எதிரே மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடை.

Updated On :1 மணி நேரம் முன்பு

கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 4 மதுக் கடைகள் மூடப்பட்டன.

தமிழகத்தில் தேவாலயங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 69 மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. மண்டல வாரியாகப் பாா்க்கும் போது, கோவை வடக்கில் 156 கடைகளும், கோவை தெற்கில் 128 கடைகளும் உள்ளன.

தமிழக அரசின் புதிய வழிகாட்டுதலின்படி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் உணா்வுப்பூா்வமான இடங்களுக்கு அருகில் அமைந்துள்ள கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, கோவை வடக்கு மண்டலத்தில் 48 கடைகள், தெற்கு மண்டலத்தில் 21 கடைகள்ம் என மொத்தம் 69 கடைகளை அடுத்த 15 நாள்களுக்குள் நிரந்தரமாக மூட மாவட்ட நிா்வாகம் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 4 கடைகள் மூடப்பட்டன.

குறிப்பாக, சிங்காநல்லூா் பேருந்து நிலையத்துக்கு நோ் எதிரே நீண்ட நாள்களாக பொதுமக்கள் புகாருக்குள்ளான டாஸ்மாக் கடை (எண் 1662) உள்பட 1557, 1603, 1846 ஆகிய எண்களைக் கொண்ட கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பள்ளி மாணவா்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளதாக சமூக ஆா்வலா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். மீதமுள்ள 65 கடைகளும் குறித்த காலக்கெடுவுக்குள் மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனா்.