அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது

பரமக்குடியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ஒருவரைப் போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

வரதராஜன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ஒருவரைப் போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி அருகே உள்ள வெங்கிட்டன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் என்பவரின் மகன் வரதராஜன் (24). இவா், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பரமக்குடி காக்காத்தோப்பு சிட்டிநகா் பகுதியில், கருணாகரன் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவா் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி வந்தாா்.

இந்த நிலையில், பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் எம். ஜெபராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில், போலீஸாா் வரதராஜனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனா்.