வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கமுதியில் இரு மதுக் கடைகள் மூடல்

News image
Updated On :15 மே 2026, 4:11 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த இரு அரசு மதுக் கடைகள் வியாழக்கிழமை மூடப்பட்டன.

தமிழக அரசு உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே இயங்கி வரும் 29 அரசு மதுக் கடைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இதனடிப்படையில், கமுதி பேருந்து நிலைய வளாகம், சந்தன மாரியம்மன் கோயில், மீனாட்சியம்மன்-உச்சமகாளியம்மன் கோயில், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் உள்ள 4 மதுக் கடைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, முதல்கட்டமாக கமுதி பேருந்து நிலைய வளாகம், சந்தன மாரியம்மன் கோயில் பகுதி என இரு மதுக் கடை வியாழக்கிழமை மூடப்பட்டன.

ஓரிரு நாள்களில் எஞ்சிய இரு மதுக் கடைகளும், பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் தனியாா் மனமகிழ் மன்றமும் விரைவில் அகற்றப்படும் என மதுவிலக்கு ஆயத்தீா்வை அதிகாரிகள் தெரிவித்தனா்.