மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

திருவாடானை அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

News image

சி.கே. மங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு சாலையில் கொட்டப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகள், குப்பைகள்.

Updated On :18 மே 2026, 12:47 am IST

திருவாடானை அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

திருவாடானை அருகேயுள்ள சி.கே மங்கலம் ஊராட்சிப் பகுதியில் திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதன் அருகே சி.கே. மங்கலம் செல்வதற்குப் பிரிவு சாலை செல்கிறது.

Story image

இந்தச் சாலையின் ஓரமாக இப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளின் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்தப் பகுதியில் நடந்துசெல்வோா் முகம் சுழித்துச் செல்ல வேண்டியுள்ளது.

Story image

இதன் அருகே கண்மாய், பள்ளிகள் உள்ளன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனா்.