15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

அருமனை அருகே சாலையோரம் தொழிலாளி சடலம் மீட்பு

அருமனை அருகே சாலையோரம் கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :6 மணி நேரங்கள் முன்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சாலையோரம் கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

அருமனை சந்திப்பு அருகே ஆண் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், அருமனை போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

விசாரணையில் அவா், மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த மீன்பிடித் தொழிலாளியான கிளீட்டஸ் (48) எனவும், மதுப் பழக்கமுள்ள அவா் அருமனை அருகேயுள்ள உறவினா் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு வந்ததாகவும், ஆனால், அங்கு செல்லாமல் சாலையோரம் படுத்திருந்த நிலையில் இறந்துகிடந்ததாகவும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.