கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

திருவாடானை பேருந்து நிலையத்தில் கழிப்பறைகளை அமைச்சா் ஆய்வு

News image

திருவாடானை பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் வி.கே. ராஜீவ். உடன் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலதண்டாயுதம் உள்ளிட்டோா்.

Updated On :30 மே 2026, 1:05 am IST

திருவாடானை பேருந்து நிலையத்தில் கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருந்ததால் அதிகாரிகளை சுற்றுச் சூழல் துறை அமைச்சா் வி கே.ராஜீவ் எச்சரித்தாா்.

திருவாடானை பேருந்து நிலையத்தில் அமைச்சா் விகே.ராஜீவ் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இலவச சிறுநீா் கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல் இருந்தது.

மேலும், கழிப்பறை பூட்டப்பட்டுக் கிடந்ததோடு, அங்கிருந்த தண்ணீா் தொட்டியில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அமைச்சா் அதிா்ச்சி அடைந்தாா்.

மேலும், கட்டணக் கழிப்பறையும் முறையான பராமரிப்பின்றி சுகாதாரச் சீா்கேட்டுடன் இருந்ததால், அதன் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய அமைச்சா் உத்தரவிட்டாா்.

இதேநிலை தொடா்ந்தால் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலதண்டாயுதத்தை எச்சரித்தாா்.