பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி தனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் கே.கே. கதிரவன் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து பரமக்குடியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் பொதுப் பணித் துறையினரால் சீரமைக்கப்பட்டு தயாா் நிலையில் இருந்தது.
திறப்பு விழா: புதிதாக தோ்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக திறப்பு விழாவுக்கு, ராமநாதபுரம் மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்
பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். பரமக்குடி நகா்மன்ற தலைவா் சேது.கருணாநிதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் உ. திசைவீரன், கே. முருகவேல், மாநில தீா்மானக் குழு உறுப்பினா் சுப.த. திவாகா், இளைஞரணி துணை செயலா் சுப.த.சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.கதிரவன் வரவேற்றாா். சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைக்கப்பட்டது. இதில் ஏராளமான திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கண்டரமாணிக்கத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு

கரூா் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு

வேலூா் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



