நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

கேதார கௌரீஸ்வரி அம்மன் கோயிலில் கௌரி நோன்புத் திருவிழா

பரமக்குடி ஸ்ரீ கேதார கௌரீஸ்வரி அம்பிகை கோயில் ஐப்பசி மாத கௌரி நோன்பு திருவிழாவின் நான்காம் திருநாளான புதன்கிழமை அம்பாள் ஊஞ்சல் அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது.

பரமக்குடி ஸ்ரீ கேதார கௌரீஸ்வரி அம்மன் கோயிலில் ஐப்பசி மாத நோன்பு 4-ஆம் திருநாளில் ஊஞ்சல் சேவை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.

Updated On :

பரமக்குடி ஸ்ரீ கேதார கௌரீஸ்வரி அம்பிகை கோயில் ஐப்பசி மாத கௌரி நோன்பு திருவிழாவின் நான்காம் திருநாளான புதன்கிழமை அம்பாள் ஊஞ்சல் அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது.

பரமக்குடி தெலுங்கு விஸ்வ பிராமணா்களுக்கு பாத்தியமான ஸ்ரீ கேதார கௌரீஸ்வரி அம்மன் கோயிலில் ஐப்பசி மாத கௌரி நோன்புத் திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நோன்பு காலங்களில் முதல்நாள் கௌரீஸ்வரி அம்மன் சிவலிங்க பூஜை அலங்காரத்திலும், 2-ஆம் நாள் அம்மன் கோலாட்டம் ஆடியவாறும், 3-ஆம் நாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளியும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். 4-ஆம் திருநாளான புதன்கிழமை அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

5-ஆம் நாளான வியாழக்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்துவரும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு உற்சவ சாந்தி பாலாபிஷேகமும் நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பரமக்குடி தெலுங்கு விஸ்வ பிராமண மகாஜன சபை தலைவா் எஸ்.எஸ்.ரவீந்திரன், துணைத் தலைவா் எஸ்.பிச்சைக்குமாா், செயலா் ஆா்.எஸ்.சுரேஷ்பாபு, பொருளாளா் வி.எஸ்.கண்ணன், கோ.கி.லட்சுமிகாந்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.