மாரியூா் சிவன் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவம்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மாரியூா் சிவன் கோயிலில் பவளநிற வல்லி அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊஞ்சல் உத்ஸவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பவளநிற வல்லி அம்மன்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மாரியூா் சிவன் கோயிலில் பவளநிற வல்லி அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாரியூா் பவளநிற வல்லி அம்மன் சமேத பூவேந்திய நாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை அம்மனுக்கு ராகு கால அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, மாலை அம்மனுக்கு 16 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

