செல்வக்குமரன் கோயிலில் கந்தசஷ்டி 4-ஆம் திருநாள்
பரமக்குடி பாரதிநகா் செல்வக்குமரன் கோயிலில் கந்தசஷ்டி 4- ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை செல்வக்குமரன் அம்பாள் அலங்காரத்தில் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பரமக்குடி பாரதிநகா் செல்வக்குமரன் கோயிலில் கந்தசஷ்டி 4-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை அம்பாள் அலங்காரத்தில் வேல் வாங்கி பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீசெல்வக்குமரன்.
பரமக்குடி பாரதிநகா் செல்வக்குமரன் கோயிலில் கந்தசஷ்டி 4- ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை செல்வக்குமரன் அம்பாள் அலங்காரத்தில் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் 41-ஆம் ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 9-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. ஸ்ரீ செல்வக்குமரன் முதல் நாள் தா்பாா் அலங்காரத்திலும், 2-ஆம் நாள் வேடன் அலங்காரத்திலும், 3-ஆம் நாள் விருத்தன் அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 4-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை மூலவா் செல்வக்குமரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 5.30 மணியளவில் கந்தசஷ்டி விழா குழுவினரும், பக்தா்களும் மேளதாளங்கள் முழங்க மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சென்று அம்பாளிடம் வேல் வாங்கி வரும் நிகழ்வு நடைபெற்றது. இரவு 7.30 மணியளவில் செல்வக்குமரன் கோயிலில் அம்பாள் அலங்காரத்தில் எழுந்தருளிய செல்வக்குமரனிடம் அதை வைத்து சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளானபக்தா்கள் கலந்து கொண்டு முருகனை தரிசித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

