கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

கந்தசஷ்டி விழா! ராஜ அலங்காரத்தில் ஜொலித்த வல்லக்கோட்டை முருகன்!

வல்லக்கோட்டையில் கந்தசஷ்டி உற்சவம் தொடங்கியதைப் பற்றி...

Kanda Sashti

வல்லக்கோட்டை முருகன் - video clip

Updated On :

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி உற்சவம் தொடங்கியது. இதனை முன்னிட்டு கருவறையில் ஏழு அடி உயரத்தில் காட்சிதரும் முருகப்பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

வல்லக்கோட்டையில் கந்தசஷ்டி உற்சவம் தொடங்கியதை முன்னிட்டு அதிகாலையில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்குப் பால் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு வெற்றிலை, சாமந்தி, செண்பகம் மலர் மாலைகளும், வெற்றிலை மலர் கிரீடமும் அணிந்து ராஜ அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலையில் திருக்கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை வணங்கி விரத மாலை அணிந்து கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினர். உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிவப்பு பட்டாடையும் சிவப்பு ரோஜா மாலைகளும் அணிந்து சிவப்பு சாத்தி அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார்.

ஆறுமுகர் சன்னதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன. சஷ்டி மண்டபத்தில் உற்சவர் ஆறுமுகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. உற்சவர் முன்பாக சத்ரு சங்கார திரிசதீ யாகம் நடைபெற்றது.

கந்தசஷ்டி உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியதால் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வணங்கினர்.

கந்தசஷ்டி உற்சவத்தை முன்னிட்டு ஆறு நாள்களும் மூலவர் சன்னதியிலும் ஆறுமுகர் சன்னதியிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளன. 14 ஆம் தேதி வல்லம் சடையீஸ்வரர் திருக்கோயிலில் வேல்வாங்கும் நிகழ்ச்சியும் 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.

கந்தசஷ்டி உற்சவ ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் சி. குமரதுரை அறிவுரைப்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ. செந்தில்குமார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.