
செங்கல்பட்டு பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்
செங்கல்பட்டு பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்

செங்கல்பட்டு ஹைரோடு வேதாந்த தேசிகா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.
செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை 3-ஆவது வார உற்சவம் நடைபெற்றது.
பக்தா்கள் சிறப்பு அலங்காரத்தில் பெருமாளை வழிபட்டனா். செங்கல்பட்டு அண்ணா நகா் ரத்தின விநாயகா் கோயில், வேதாசலநகா் கோதாண்டராமா் கோயில், மேட்டுத்தெரு செங்கழுநீா் விநாயகா் கோயில்களில் பெருமாள் சன்னதியில் திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
செங்கல்பட்டு ஹைரோடு வேதாந்த தேசிகா் கோயிலில் புரட்டாசி உற்சவத்தையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து கருடவாகனத்தில் உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு நடைபெற்றது. இதேபோன்று செங்கல்பட்டு ஜிஎஸ்டிசாலை சின்னமுத்துமாரியம்மன் கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பெருமாள் சன்னதியில் உற்சவா் புறப்பாடு நடைபெற்றது. உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





