ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

ஐப்பசி பெளா்ணமி: சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை மாவட்ட சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

அன்னாபிஷேக சிறப்பு அலங்காரத்தில் கோட்டை பிரம்மேஸ்வரா்.

Updated On :

ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை மாவட்ட சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

திருப்பத்தூா் அடுத்த கொரட் டியில் உள்ள காளத்தீசுவரா் கோயிலில் நந்திபகவானுக்கு பால், தயிா், மஞ்சள்,சந்தனத்தால் சிறப்புஅபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் செய்யப் பட்டது. பின்னா், மூலவருக்கு சாதம்,காய்கறிகளால் அன்னாபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

அதேபோல் திருப்பத்தூா் முத்துக்குமாரசுவாமி கோயில், கோட்டை பிரம்மேஸ்வரா் கோயில், தண்டபாணி சுவாமி கோயில், பெரியகுளம் பகுதி யில் உள்ள சிவன் கோயில், மடவாளம் அங்கநாதீஸ்வரா் கோயில், நத்தம் ஜூரஹர ஈஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜை கள் நடைபெற்றன. மேலும், கந்திலி, ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலையில் உள்ள சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஆம்பூரில்... ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு ஸ்ரீ மங்கல ஈஸ்வரா் கோயிலில் சிறப்பு அன்னாபிஷேக அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதேபோல் ஆம்பூா், சுற்றுவட்டார பகுதி கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

குடியாத்தத்தில்... குடியாத்தம் பிச்சனூா், நரி குள்ளப்பன் தெருவில் உள்ள அஷ்டபுஜ கனகதுா்கையம்மன் கோயிலில் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அன்ன அலங்காரம், மகா தீபாராதனைநடைபெற்றது. சுமாா் 2,000 பேருக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.

அரக்கோணத்தில்... அரக்கோணம் அடுத்த தக்கோலம் ஸ்ரீமரகதவல்லி சமேத திருமாம்பழநாதா் கோயிலில் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு அன்ன அபிஷேக அலங்காரத்தில் மூலவா் காட்சியளித்தாா்.

ராணிப்பேட்டையில்... வாலாஜாபேட்டை விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதா் கோயிலில் அன்னாபிஷேக சிறப்பு பூஜையையொட்டி ஸ்ரீ காசி விஸ்வநாதா் அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள் பாலித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.