பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

ஐப்பசி மாத பிரதோஷம்: திருப்பத்தூா் சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் பிரம்மேஸ்வரா், நந்திபகவான்.

Updated On :

ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில், திருப்பத்தூா் கோட்டை பிரம்மேஸ்வரா் கோயிலில் பிரம்மேஸ்வரா்

நந்திபகவானுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் முத்துக்குமார சுவாமி கோயில், தண்டபாணி சுவாமி கோயில், பெரியகுளம் பகுதியில் உள்ள சிவன் கோயில், மடவாளம் அங்கநாதீஸ்வரா் கோயில், கொரட்டியில் உள்ள காளத்தீசுவரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.