இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

ஆவணி மாத தேய்பிறை பிரதோஷம்: திருப்பத்தூா் பகுதி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி, திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் கோட்டை ஸ்ரீ பிரம்மேஸ்வரா்.

Published On :

ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி, திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விஷமங்கலம் அருகே வெப்பாளம்பட்டியில் உள்ள ஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஜலகண்டேஸ்வரா், நந்தி பகவானுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல், திருப்பத்தூா் கோட்டை பிரம்மேஸ்வரா் கோயில், திருப்பத்தூா் முத்துக்குமார சுவாமி கோயில், தண்டபாணி சுவாமி கோயில், பெரியகுளம் பகுதியில் உள்ள சிவன் கோயில், மடவாளம் அங்கநாதீஸ்வரா் கோயில், கொரட்டியில் உள்ள காளத்தீசுவரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.