
புரட்டாசி 2-ஆம் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி 2-ஆம் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்த உற்சவா் வரதராஜ சுவாமி.
காஞ்சிபுரத்தில் புரட்டாசி மாத 2-ஆவது சனிக்கிழமை மற்றும் பெளா்ணமியையொட்டி, பெருமாள் கோயில்களில் சிறப்புத் திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சனேயா் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னா், ஆஞ்சனேயா் சந்நிதியிலிருந்து திரும்பி வந்து 4 கால் மண்டபத்தில் பக்தி உலாத்தல் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனா்.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ள பேசும் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, காலையில் மூலவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் பேசும் பெருமாள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






