கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

புரட்டாசி சனிக்கிழமை: கூழமந்தல் பேசும் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை: கூழமந்தல் பேசும் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கூழமந்தல் பேசும் பெருமாள்.

Published On :

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள கூழமந்தல் பேசும் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, சிறப்புத் திருமஞ்சனமும், அலங்காரமும் தீபாராதனைகளும் நடைபெற்றது.

காஞ்சிபுரத்திலிருந்து கூழமந்தல் செல்லும் சாலையில் அமைந்துள்ளது பழைமையான பேசும் பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில், அஷ்டபுஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.