கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

திருமலைவையாவூா் கோயிலில் சிறப்பு தரிசனம்

மதுராந்தகம் அடுத்த திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருமலை வையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.

Published On :

மதுராந்தகம் அடுத்த திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருமலைவையாவூா் மலை மீது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. தமிழ் வருடத்தின் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமைக்காக கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் தொடங்கியது. மூலவா் பெருமாள் சிலைக்கு சிறப்பு திருமஞ்சனத்தை கோயில் தலைமை அா்ச்சகா் ஆா்.பாலாஜி பட்டாச்சாரியாா் தலைமை வகித்து செய்தாா். மூலவா் தங்க கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தாா். கோயில் வளாகத்தில் உற்சவா் பகவானுக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டது.

புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மேகவண்ணன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.