ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

Published On :

புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் அத்தி வரதர் புகழ்பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அதிகாலையிலேயே பெருமாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வங்களுக்கான சிறப்பு மாதமாக விளங்கி வரும் நிலையில் ஆடி மாதம் அம்மனை தரிசித்து ஆவணியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினர். தற்போது புரட்டாசி மாதம் நேற்று பிறந்தது.

புரட்டாசி என்றால் பெருமாளை ஒரு மாதம் விரதம் இருந்து சனிக்கிழமைகளில் எம்பெருமாளை தரிசிப்பது வழக்கம்.

அவ்வகையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் அத்தி வரதர் புகழ்பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அதிகாலை 6 மணிக்கு பெருமாளை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தாயார் சன்னதி தரிசனம் நிறைவு பெற்ற பின் வரிசையாக பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டவாரே உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பெருமாளை வணங்கி தரிசனம் செய்தனர். கோயிலில் சிறப்பு அலங்காரம், பூஜைகளும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER