
ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோத்ஸவம் தொடக்கம்: செப்.20- ல் திருக்கல்யாணம், 23-இல் செப்புத் தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதாரத் திருவிழாவான புரட்டாசி பிரம்மோத்ஸவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

~ ~ ~
ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதாரத் திருவிழாவான புரட்டாசி பிரம்மோத்ஸவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 20-ஆம் தேதி திருக்கல்யாணம், 23-ஆம் தேதி செப்புத் தேரோட்டம் நடைபெறும்.
முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். இதன் பிறகு, கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. கொடியை சதீஷ் பட்டா் ஏற்றினாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினசரி காலை மண்டபங்களில் ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி சமேத பெரிய பெருமாள் எழுந்தருளுவாா். சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
வருகிற 19-ஆம் தேதி தங்கக் கருட சேவை, 20-ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணம், 21-ஆம் தேதி சயன சேவை ஆகியவை நடைபெறும். பெரிய பெருமாள் அவதரித்த பெரிய திருவோண நட்சத்திரத்தில் வருகிற 23- ஆம் தேதி காலை 7 மணிக்கு செப்புத் தேரோட்டம் நடைபெற உள்ளது.
கொடியேற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி, நகராட்சி ஆணையா் குமாா், வட்டாட்சியா் அருளானந்தம், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சக்கரையம்மாள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்தனா்.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






